தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாவட்டங்களுக்கு இடையேயான மெகா வினாடி-வினா போட்டி

மாவட்டங்களுக்கு இடையேயான மெகா வினாடி-வினா போட்டி

மாவட்டங்களுக்கு இடையேயான மெகா வினாடி-வினா போட்டி


ADDED : அக் 23, 2025 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை வி.ஏ.வி., இன்டர்நேஷனல் பள்ளியில், நாளை, (25ம் தேதி) மாவட்டங்களுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி நடைபெறுகிறது.

வி.ஏ.வி., இன்டர்நேஷனல் பள்ளி இன்ட்ராக்ட் கிளப், உடுமலை ரோட்டரி கிளப், காந்திநகர் ரோட்ரேக்ட் கிளப் மற்றும் கோவை யுனிட்டி ரோட்ரேக்ட் கிளப் சார்பில் இப்போட்டிகள் நடைபெற உள்ளது.

பள்ளி பிரிவில், 6 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு பள்ளிக்கு 5 அணிகள், ஒரு அணிக்கு அதிகபட்சம் 3 உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம்.

காலை, 9:00 மணி முதல் போட்டிகள் நடைபெறும்.

பொதுப்பிரிவில், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் இப்போட்டியில், ஒரு அணிக்கு அதிகபட்சம் 3 உறுப்பினர்கள் பங்கேற்கலாம்.

காலை, 10:30 மணி முதல் போட்டிகள் நடைபெறும். போட்டியில் பங்கேற்க இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 90956-55633 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us