sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பள்ளிகளுக்கு இடையே ஸ்கேட்டிங் போட்டி

/

 பள்ளிகளுக்கு இடையே ஸ்கேட்டிங் போட்டி

 பள்ளிகளுக்கு இடையே ஸ்கேட்டிங் போட்டி

 பள்ளிகளுக்கு இடையே ஸ்கேட்டிங் போட்டி


ADDED : பிப் 18, 2026 06:43 AM

Google News

ADDED : பிப் 18, 2026 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உடுமலை ஜாகுவார் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தது.

உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பள்ளிகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 6 வயது முதல் 16 வயது வரை, பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது.

என்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுகந்தி, போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கணேசன் முன்னிலை வகித்தார்.

விவேகானந்தா வித்யாலய மேல்நிலைப்பள்ளி தாளாளர் மூர்த்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பைகளை வழங்கி பேசினார்.

அதிக எண்ணிக்கையில் பங்கேற்ற தாராபுரம் பொன்னு மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை, என்.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்றனர்.

அதற்கான வெற்றி கோப்பை பள்ளி முதல்வருக்கு வழங்கப்பட்டது. அதிக வெற்றிகளை பெற்ற ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ், ஆர்.கே.ஆர்., ஞானோதயா, மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர்., ஆர்.கே.ஆர்., குருவித்யா பள்ளிகளுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகள் வழங்கப்பட்டது.

போட்டிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் நாகராஜன் மற்றும் அகாடமி நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us