/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைந்த நீரில் கொய்யா சாகுபடி செய்ய ஆர்வம்
/
குறைந்த நீரில் கொய்யா சாகுபடி செய்ய ஆர்வம்
ADDED : அக் 03, 2024 05:04 AM

உடுமலை : உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்று பாசனத்துக்கு, சொட்டு நீர் அமைத்து, கொய்யா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சந்தை வாய்ப்புகள் அதிகமுள்ள 'பிங்க்' ரகத்தையே நடவுக்கு தேர்வு செய்கின்றனர்.
சில விவசாயிகள் இச்சாகுபடியில், இயற்கை வேளாண் முறைகளையே பின்பற்றுகின்றனர். மண் புழு உரம், நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய், வேப்பம்புண்ணாக்கு கரைசலை பயன்படுத்துகின்றனர். இயற்கை வேளாண் முறைகளை பின்பற்றினால், மரங்களில் காய்ப்பு திறன் அதிகரிப்பதுடன் காய்களும் அதிக எடையுடன் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், கொய்யா சாகுபடிக்கு மானியமும் வழங்கப்பட்டது. சந்தை வாய்ப்புகளும் அதிகரித்து ஆண்டு முழுவதும் கொய்யாவுக்கு நிலையான விலை கிடைத்து வருகிறது. தொழிலாளர் தேவையும் குறைவாக இருப்பதால், இச்சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.