sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விளையாட்டு, தொழிற்கல்வி மீது ஆர்வம் தேவை

/

விளையாட்டு, தொழிற்கல்வி மீது ஆர்வம் தேவை

விளையாட்டு, தொழிற்கல்வி மீது ஆர்வம் தேவை

விளையாட்டு, தொழிற்கல்வி மீது ஆர்வம் தேவை


ADDED : நவ 01, 2025 12:17 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மா ணவ, மாணவியருக்கு பள்ளிக்கல்வி அவசியமானது; அதேசமயம், பள்ளிப்பருவத்தில் தொழிற்கல்வி மற்றும் விளையாட்டு மீதான ஆர்வத்தை, மாணவ, மாணவியர் பெரும்பாலானோர் வளர்த்துக்கொள்வதில்லை. அதற்கு, சில நேரங்களில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட தடைக்கற்களாக அமைந்து விடுகின்றனர். இதனால், அவர்களது திறமைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன.

விளையாட்டில் சாதிக்க பள்ளியே சிறந்த களம் ராமகிருஷ்ணன், உடற்கல்வியாசிரியர், நகராட்சி உயர்நிலைப்பள்ளி, நொய்யல் வீதி, திருப்பூர்: குழந்தைகள் மூன்று வயதிலிருந்தே பள்ளிக்கல்வியைத் துவங்குகின்றன. அப்போதே விளையாட்டையும் கற்க வேண்டும். தொடக்கப்பள்ளி முதல் விளையாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தி, பள்ளிப் பருவத்திலே விளையாடும்படி பழக்கப்படுத்த வேண்டும்.

செஸ் போன்ற விளையாட்டால் மூளை தெளிவாகி, ஞாபக சக்தி மேம்படும். சிந்தித்து செயல்படும் திறன் வளரும்; பக்குவப்படுவர், பிற்காலங்களில் வன்முறை தடுக்கப்படும். விளையாடுவோருக்கு மட்டுமே வலது, இடது என இரு மூளைகளும் துாண்டப்படும்.

விளையாடும் மாணவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை, இட ஒதுக்கீடு வழங்குகிறது. அதேபோல் ஊக்கத்தொகை பயிற்சியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அது பயிற்சியாளரையும் ஊக்குவித்து, இருவருக்கும் பலனளிக்கும். சிறு வயதில், பள்ளிப் பருவத்தில் மட்டுமே விளையாட்டில் சாதிக்க முடியும்.

மொபைல்போனுக்கு அடிமையாவதை தவிர்த்து, விளையாட்டில் சாதிப்பதற்கு பள்ளியே சிறந்த களம். அதேபோல், அனைத்து பள்ளிகளிலும், தாராளமாக விளையாட்டு மைதானத்தை அமைக்க வேண்டும்.

தொழிற்கல்வி பயில்வது மாணவருக்கு வாய்ப்பு அருள்ராஜ், தொழிற்கல்வி ஆசிரியர், கே,எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்: பத்தாம் வகுப்பு முடிந்தவுடன், பிளஸ் 1ல், பெரும்பாலானோர் அறிவியல், கலை பிரிவுகளை தேர்வு செய்கின்றனர்.

தொழிற்கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லை. மத்திய, மாநில அரசு தொழிற்கல்வி பயில்வோர்க்கு தனி இட ஒதுக்கீடு, இன்டர்ன்ஷிப் சலுகைகளை வழங்குகிறது. கடந்த, 1978ல் தொழிற்கல்வி 64 பிரிவுகள் கொண்டதாக கொண்டுவரப்பட்டது. தற்போது 12 பிரிவுகள் கொண்டதாக இருக்கிறது.

நாளுக்கு நாள் இதன் வளர்ச்சி குறைகிறது. 2001 காலகட்டங்களில் 4000 ஆசிரியர்கள் கற்பிக்க 2 லட்சம் மாணவர்கள் தொழிற்கல்வி பயின்றனர். கடந்தாண்டு எங்கள் பள்ளியில் 200 பேர் தொழிற்கல்வி பயின்றனர். இந்தாண்டு பிளஸ் 2 வில் 45 மாணவர்கள், பிளஸ் 1ல் 50 பேர் பயில்கின்றனர். காரணம் ஆசிரியர் பற்றாக்குறை.

படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியாதவர்களுக்கு செய்முறைப் பயிற்சிகளைக் கொண்ட தொழிற்கல்வி ஒரு நல்ல வாய்ப்பு. செய்முறைப் பயிற்சிகளால் எளிமையாகக் கற்க முடியும். வேலைவாய்ப்பை மேம்படுத்த இது உதவும். அரசு நல்ல முயற்சி எடுத்துள்ளது.

ஆரம்பத்தில் இன்டர்ன்ஷிப் இல்லை. இப்போது நிறுவனங்கள் உதவியுடன் சில ஆண்டுகளாக இன்டர்ன்ஷிப் தொடங்கியுள்ளனர். பிளஸ் 2வில் 80 மணி நேரம் அகப்பயிற்சி இருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவர்கள் இதை கற்க முன்வர வேண்டும். அரசும் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்காக போதிய ஆசிரியர்நியமனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.






      Dinamalar
      Follow us