/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடங்களை பயன்படுத்த ஆர்வம்; நேரடி விற்பனையால் மாற்றம்
/
விற்பனை கூடங்களை பயன்படுத்த ஆர்வம்; நேரடி விற்பனையால் மாற்றம்
விற்பனை கூடங்களை பயன்படுத்த ஆர்வம்; நேரடி விற்பனையால் மாற்றம்
விற்பனை கூடங்களை பயன்படுத்த ஆர்வம்; நேரடி விற்பனையால் மாற்றம்
ADDED : பிப் 13, 2025 09:54 PM

உடுமலை ; 'இ-நாம்' திட்டத்தில் நேரடி விற்பனை உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளால், பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை பயன்படுத்தும் விவசாயிகள் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்துள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் மக்காச்சோள சாகுபடியும் அதிக அளவில் நடக்கிறது.
அவ்வகையில், குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு பிரதான பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதி விவசாயிகளுக்காக, திருப்பூர் மாவட்ட விற்பனை குழுவின் கீழ், பெதப்பம்பட்டியில், ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
முன்பு விவசாயிகள் தங்கள் கிராமத்திலேயே, வியாபாரிகளுக்கு மக்காச்சோளம் விற்பனை செய்து வந்தனர்; இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய, மாநில அரசு சார்பில், 'இ-நாம்' திட்டத்தில், நேரடி கொள்முதல் முறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், அமல்படுத்தப்பட்டது. இதனால், பெதப்பம்பட்டி உள்ளிட்ட ஒழுங்கு முறை விற்பனை கூடங்களை பயன்படுத்தும் விவசாயிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ராமன் கூறியதாவது: விற்பனைக்கூட வளாகத்துக்கு, மக்காச்சோளம் கொண்டு வரும் விவசாயிகளுக்கு தேவையான உலர்களங்கள் உள்ளது.
மேலும், ஏற்றுக்கூலி, இறக்கும் கூலி, வண்டி வாடகை, ஒட்டுநர் படி ஆகிய செலவினங்கள் இல்லாமல், மக்காச்சோளத்தை விவசாயிகளிடமிருந்து, நிறுவனத்தினர் மற்றும் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகளுக்கு தங்கும் அறை, கழிப்பிடம், குளியலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. இருப்பு செய்பவர்களுக்கு தேவையான குடோன் வசதியும், பொருளீட்டு கடனும் பெற்றுத்தரப்படுகிறது.
இதனால், இந்த சீசனில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை பயன்படுத்தும் விவசாயிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.
குடிமங்கலம் பகுதி விவசாயிகள், விற்பனைக்கூடத்தை அணுகி பயன்பெறலாம்.