/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதி கடன் மீதான வட்டி மானியம்
/
ஏற்றுமதி கடன் மீதான வட்டி மானியம்
ADDED : ஜன 04, 2026 04:44 AM

திருப்பூர்: மத்திய அரசு, ஏற்றுமதி கடன் மீதான வட்டி மானியத்தை மீண்டும் அறிவித்துள்ளதை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மத்திய அரசு, ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிறகு வாங்கிய கடன்களுக்கான வட்டி மானிய திட்டத்தை மீண்டும் அறிவித்துள்ளது. வட்டி சிரமத்தை குறைக்கவும், புதிய மூலதன கடன் பெறவும் வசதியாக, 2.75 சதவீதம் அளவுக்கு வட்டி மானியம் வழங்கப்படுமென அறிவித்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துக்கு, ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை, வட்டி மானியம் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி கடன்களுக்கு, பல்வேறு விதிமுறைகளுக்கு உட் பட்டே, வட்டி மானியம் பொருந்தும்.
மத்திய ரிசர்வ் வங்கி, விரைந்து வங்கிகள் வாயிலாக, இந்த அறிவிப்பை செயல்படுத்த வேண்டும். அமெரிக்க வரிகளி ன் தாக்கத்தால் ஏற்றுமதியாளர்கள் தற்போது கடுமையான சவால்களை சந்தித்து வருகின்றனர்.
சரியான நேரத்தில் வழங்கும் வட்டி மானியசலுகை, இத்தகைய இக்கட்டான நிலையை கடந்து செல்ல உதவியாக இருக்கும். ஏற்றுமதியாளர்கள் புத்தாண்டில் இருந்து புதிய முயற்சியை துவக்க வாய்ப்பாக இந்த அறிவிப்பு இருக்கும்.
பல்வேறு சவால்கள் இருந்தாலும், 2026ம் ஆண்டு, பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ஆண்டாகவும், வழிகாட்டும் ஆண்டாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

