/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில வாலிபால் போட்டி: பங்கேற்க விருப்பமா?
/
மாநில வாலிபால் போட்டி: பங்கேற்க விருப்பமா?
ADDED : ஜன 20, 2024 02:39 AM
திருப்பூர்;வேலுாரில் நடக்கும் மாநில சப்--- ஜூனியர் வாலிபால் போட்டியில் பங்கேற்க விருப்ப வீரர், வீராங்கனையர், திருப்பூர் மாவட்ட வாலிபால் அணிக்கான தேர்வில் நாளை (21 ம் தேதி) பங்கேற்கலாம்.
இது குறித்து, மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் ரங்கசாமி அறிக்கை:
வேலுாரில், வரும், 27 முதல், 30ம் தேதி வரை, 41வது சப் ஜூனியர் மாநில வாலிபால் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட வாலிபால் அணித்தேர்வு வரும், 21ம் தேதி காலை, 9:30 மணிக்கு, திருப்பூர், காங்கயம் ரோடு, வித்ய விகாஷினி பள்ளியில் நடக்கிறது.
இதில், பள்ளி மாணவ, மாணவியர், வாலிபால் மாவட்ட கிளப், குழுக்கள் பங்கேற்கலாம். 2008 ஜன., 1ம் தேதிக்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். ஆதார், பள்ளி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் அவசியம். கூடுதல் விவரங்களுக்கு, 94872 82456, 98946 89941 என்ற எண்ணில் அழைக்கலாம்.
இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளார்.