/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வதேச சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி
/
சர்வதேச சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி
சர்வதேச சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி
சர்வதேச சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு ஓவியப்போட்டி
ADDED : மார் 20, 2025 11:26 PM
உடுமலை: சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, உடுமலை சுற்றப்பகுதி பல்வேறு சங்கங்களின் சார்பில், போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம், சர்வதேச தண்ணீர் தினம் மற்றும் காடுகள் தினத்தையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், எம்.ஜி. சஞ்சீவ் ராஜ் நினைவு அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடக்கிறது.
போட்டிகள், வரும் 23ம்தேதி காலை, 9:00 மணிக்கு சுபாஷ் ரேணுகாதேவி கல்வி அறக்கட்டளையில் நடக்கிறது. ஒன்று முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும், நான்கு பிரிவுகளில் ஓவியப்போட்டி நடக்கிறது.
ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை, 'இயற்கை காட்சி', 4, 5ம் வகுப்புகளுக்கு, 'வனத்தின் அழகு', 6 முதல் எட்டாம் வகுப்பு வரை, 'தண்ணீர் தண்ணீர்', 9 முதல் பிளஸ் 2 வரை, 'சிறகடிக்கும் சிட்டுக்குருவி' உள்ளிட்ட தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பங்கேற்கும் மாணவர்கள் களப்பயணமாக பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
சிட்டுகுருவிகளை பற்றி குறும்படம் திரையிடப்பட உள்ளன. காடுகளை பாதுகாப்பது, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது.
போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், 73059 67764, 87782 01926 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.