/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வதேச பயிற்சி மாணவர் தேர்வு
/
சர்வதேச பயிற்சி மாணவர் தேர்வு
ADDED : பிப் 20, 2026 04:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு வணிக நிர்வாகவியல் படித்து வரும் மாணவர் வருண் சித்தார்த் தமிழக அரசின் 'நான் முதல்வன்' சிறப்பு திட்டத்தின் கீழ் சர்வதேச பயிற்சியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவரை கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா சால்வை அணிவித்து பாராட்டினார். 'நான் முதல்வன்' திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாலமுருகன், வணிக வியல் துறை தலைவர் பேராசிரியர் அருண் மற்றும் பேராசிரியர்கள் மாணவனை வாழ்த்தினர்.

