ADDED : பிப் 19, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஆக்ஸ்பா' கற்பித்தல் மற்றும் மேம்பாட்டு மையத்துடன் பல்லடம் அரசு கல்லுாரி இணைந்து, 'உலக அளவில் கற்பித்தல் முறைகள் மற்றும் கருவிகள் 2024' எனும் சர்வதேச பயிலரங்கை, கடந்த 12 முதல் 16ம் தேதி வரை நடத்தியது. கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார். 'ஆக்ஸ்பா' கற்பித்தல் மற்றும் மேம்பாட்டு மைய நிறுவனர் நல்லமணி முன்னிலை வகித்தார்.
முதன்மை பேச்சாளரான கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ரம்யா லம்போ கிரீஸ் உள்பட 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பேச்சாளர்கள் பங்கேற்று பேசினர். பேராசிரியர் முகிந்த பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

