/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் இணைய சேவை :கல்வித்துறை அறிவுறுத்தல்
/
பள்ளிகளில் இணைய சேவை :கல்வித்துறை அறிவுறுத்தல்
ADDED : ஜன 08, 2024 11:10 PM
உடுமலை:அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைப்பதற்கு, தற்போது பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
பள்ளிகளில், '100 எம்பிபிஎஸ்' வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை, அதிகபட்சமாக, 1,500 ரூபாய் கட்டணத்துக்குள் அமைக்கவும், அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக்குழுவுக்கு அனுப்பப்படும் எனவும், கல்வித்துறை ஏற்கனவே சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறு பெறப்படும் பிராட்பேண்ட் சேவை, பி.எஸ்.என்.எல்., வாயிலாக இருக்க வேண்டும் என, கூடுதலாக பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இணைய இணைப்பு பெற்ற பள்ளிகளை தவிர்த்து, புதிதாக இணைப்பு பெற உள்ள துவக்கம் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை அனைத்தும், பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் இணைய சேவை பெறுவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.