/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இணைய சேவையில் வேகம் குறைவு; அரசு பள்ளிகளில் பாதிப்பு
/
இணைய சேவையில் வேகம் குறைவு; அரசு பள்ளிகளில் பாதிப்பு
இணைய சேவையில் வேகம் குறைவு; அரசு பள்ளிகளில் பாதிப்பு
இணைய சேவையில் வேகம் குறைவு; அரசு பள்ளிகளில் பாதிப்பு
ADDED : மார் 28, 2025 10:01 PM
உடுமலை; அரசு துவக்கப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகளுக்கான இணைய சேவையின் வேகம் குறைந்துள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் உண்டாவதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு துவக்கப்பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கு, நடப்பு கல்வியாண்டின் துவக்கத்திலிருந்து பணிகள் நடக்கிறது.இதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்படுவதற்கு முன்பாகவே, அதற்கு இணைய சேவை பள்ளிகளில் பெறப்பட்டது.
இந்த சேவைக்கான தொகை, அரசின் சார்பில் பள்ளிகளின் வங்கிக்கணக்கிற்கு வழங்கப்பட்டு வந்தது. அதன் பின், ஸ்மார்ட் வகுப்பறைக்கான ஒவ்வொரு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த இணைய சேவையை பயன்படுத்தி ஆசிரியர்கள் 'டேப்' மூலம் பாடம் நடத்தி வந்தனர். கடந்த ஒரு மாதமாக, இணைய சேவையின் வேகம் பாதியாக குறைந்துள்ளது. அதற்கேற்ப அந்த சேவைக்கான கட்டணத்தொகையும் குறைத்து வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
கடந்த ஓராண்டாக துவக்கப்பள்ளிகளில் வழங்கப்பட்ட இணைய சேவைக்கு, ரூ.1,500 வரை கட்டணம் அரசின் சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் மார்ச் மாதத்திற்கு, 900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இணைய சேவையின் வேகமும் முன்பை விட பாதியாக குறைந்துள்ளது. சில பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைக்கான போர்டுகள் அமைக்கப்பட்டு விட்டன. அப்பள்ளிகளில் இந்த வேகத்துடன் உள்ள இணைய சேவையை மிகவும் குறைந்த செயல்பாட்டுடன் உள்ளது. இவ்வாறு தொடர்ந்தால் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டும் பயன்பாடில்லாமல் போய்விடும். இவ்வாறு, தெரிவித்தனர்.