/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெற்பயிருக்கு மாற்றுப்பயிர் திட்டம்
/
நெற்பயிருக்கு மாற்றுப்பயிர் திட்டம்
ADDED : பிப் 23, 2024 12:00 AM
திருப்பூர்;நெற் பயிருக்கு மாற்றுப்பயிர் திட்டத்தின் கீழ், தாராபுரத்தில், 100 ஏக்கர் பரப்பில் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் துவக்க விழா நடந்தது.
நெல் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவிட்டதாலும், நெல் சாகுபடி இயற்கை சூழலை மாற்றுவதாலும், நெல் பயிருக்கு மாற்றுப்பயிர் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தின் கீழ், திருப்பூரில் நெற்பயிருக்கு மாற்றுப் பயிராக மக்காச்சோளம், பயறு வகை சாகுபடி செய்ய மத்திய அரசு, நிதியுதவி வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் தாராபுரம் வட்டம், கோவிந்தாபுரம் கிராமத்தில், 100 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை வாயிலாக, சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் துவக்க விழாவுக்கு முன்னோடி விவசாயி பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுருளியப்பன், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட ஆலோசகர் அரசப்பன், வேளாண்மை உதவி இயக்குனர் லீலாவதி ஆகியோர் பேசினர்.
'ஆரோக்கிய வாழ்வுக்கு அரிசி உணவுடன் பயறு வகை, சிறு தானியங்களை உள்ளடக்கிய சமச்சீர் உணவு உட்கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்' என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக விஞ்ஞானிகள் டாக்டர் சிவசுப்ரமணியன், செல்வகுமார், அழகர், சங்கீதா ஆகியோர், மக்காச்சோள வகைகள், சாகுபடி குறித்த ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு, தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினர். நடமாடும் மண் ஆய்வு கூட மேலாண்மை அலுவலர்கள் சந்தியா, சங்கீதா ஆகியோர், மண் பரிசோதனை மேற்கொண்டனர்.
ஏற்பாடுகளை வேளாண்மை பல்கலை அலுவலர்கள் மற்றும் வேளாண் துறையினர் செய்திருந்தனர்.