ADDED : நவ 07, 2024 12:08 AM
திருப்பூர்; கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகராஜ் நேற்று பொறுப்பேற்றார்.
திருப்பூர் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) பணிபுரிந்த விஜயராஜ், கடந்த ஜூனில், நெடுஞ்சாலை நில நிர்வாக ஆணையரக (தனி) மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாறுதலாகி சென்றுவிட்டார். நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் கூடுதல் பொறுப்பாக கவனித்துவந்தார்.
தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையிலான, 29 அதிகாரிகளை பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல் செய்து அரசு செயலர் உத்தரவிட்டார். ஊட்டி ஆர்.டி.ஓ., மகாராஜ், திருப்பூர் கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டார். கலெக்டரின் புதிய நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், நேற்று பொறுப்பேற்றார். அவரை, வருவாய்த்துறையினர் சந்தித்து வாழ்த்தினர். நேர்முக உதவியாளர் மகராஜ் ஏற்கனவே, திருப்பூரில் மாவட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.