தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சத்துணவு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு

சத்துணவு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு

சத்துணவு உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு


ADDED : ஜூன் 03, 2025 12:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2025 12:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை; சத்துணவு உதவியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்து வருகிறது.

குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளில், 75க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், உள்ள சத்துணவு மையங்களில், 9 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இப்பணியிடங்களை நிரப்ப திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியத்தில், 9 காலிப்பணியிடங்களுக்கு, 35 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு பி.டி.ஓ., சுப்பிரமணியம், உடுமலை தாசில்தார் கவுரிசங்கர் முன்னிலையில் நேற்று நடந்தது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்; முடிவுகள் மாவட்ட நிர்வாகத்தினரால் வெளியிடப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us