/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் பணியாளர்களாக 29ம் தேதி நேர்முகத்தேர்வு
/
ரேஷன் பணியாளர்களாக 29ம் தேதி நேர்முகத்தேர்வு
ADDED : நவ 18, 2024 06:33 AM
திருப்பூர் ; ரேஷன் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோர், ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ரேஷன் கடைகளில், 86 விற்பனையாளர்; 49 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு, திருப்பூர் - பல்லடம் ரோட்டிலுள்ள திருப்பூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், வரும் 29ம் தேதி, நடைபெற உள்ளது.
ரேஷன் கடைகளில் பணிபுரிய விருப்பமுள்ள ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள், www.drbtiruppur.net என்கிற இணையதளத்திலிருந்து ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேர்முகத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள், ஹால்டிக்கெட், கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான ஒரிஜினல் ஆவணங்கள் மற்றும் சுய கையொப்பமிட்ட இரண்டு நகல்கள், இரண்டு போட்டோ, விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான ரசீது நகல் ஆகியவற்றை எடுத்துச்செல்லவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 0421 2971173 தொலைபேசி எண் அல்லது drbtiruppur2024@gmail.com இ-மெயிலில், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை தொடர்புகொள்ளலாம்.