நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர், எஸ்.பெரியபாளையத்தில் நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், 100 அடி உயரம் கொண்ட மொபைல் போன் டவரில் ஏறி, ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக, தகவல் கிடைத்தது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் வடக்கு போலீசார் விரைந்து சென்றனர். அவரிடம் பேச்சு நடத்தி, கீழே அழைத்து வந்தனர். விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார், 27 என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிந்தது.