/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதையில் பாதை மாறும் மாணவர்கள்! கல்லுாரி முதல்வர் வேதனை
/
போதையில் பாதை மாறும் மாணவர்கள்! கல்லுாரி முதல்வர் வேதனை
போதையில் பாதை மாறும் மாணவர்கள்! கல்லுாரி முதல்வர் வேதனை
போதையில் பாதை மாறும் மாணவர்கள்! கல்லுாரி முதல்வர் வேதனை
ADDED : ஜன 06, 2024 11:10 PM

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில் 'போதையில்லா தமிழகம்' என்ற தலைப்பில், புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்து, கண்காட்சியை துவக்கி வைத்து பேசுகை யில், ''போதை பழக்கம் என்பது, உடல் நலம், சமூக நலம் மற்றும் மன நலத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். போதைக்கு அடிமையானவர்கள் உணவில்லாமல் கூட இருப்பார்கள்; ஆனால், போதைப் பொருள் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.
கல்வி கற்கும் நிலையில் உள்ள மாணவர்கள் மத்தியில் நிலவும் போதை பழக்கம், அவர்களின் கற்றல் நிலையை பாழாக்கும்'' என்றார். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் நன்றி கூறினார்.