/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மினி ஓவல் பிரின்டிங்' மெஷின் அறிமுகம்
/
'மினி ஓவல் பிரின்டிங்' மெஷின் அறிமுகம்
ADDED : பிப் 06, 2025 02:20 AM

திருப்பூர்: 'ஐ அண்ட் எம்' மார்க்கெட்டிங் நிறுவனம் சார்பில், சீனாவின் 'பைஹாங்' நிறுவனத்தின், மினி ஓவல் பிரின்டிங் மெஷின் அறிமுகம் மற்றும் செயல்முறை விளக்கம், திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் நேற்று நடந்தது.
திருப்பூர் 'நிட் பிரின்டர்ஸ்' அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த், புதிய 'மினி ஓவல்' பிரின்டிங் மெஷினை அறிமுகம் செய்து வைத்து கூறுகையில், ''திருப்பூரில், மர டேபிள்களுக்கு மாற்றாக 'கிளாஸ்' டேபிள் அறிமுகம் செய்து, பிரின்டிங் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது 'ஐ அண்ட் எம்' நிறுவனம்.
குறைந்த முதலீட்டில், நிறைவான உற்பத்தியை வழங்கும் பிரின்டிங் இயந்திரங்களை வினியோகித்து வருகின்றனர். பிரின்டிங் நிறுவனங்களுக்கு, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், நவீன பிரின்டிங் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகின்றனர். பயிற்சி பெற்ற தொழிலாளர்களையும் சப்ளை செய்ய திட்டமிட வேண்டும்,'' என்றார்.
'ஐ அண்ட் எம்' மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் மோகன்ராஜ் கூறியதாவது:
கடந்த, 2005 முதல் ஸ்கிரீன் பிரின்டில் தளவாடங்களை விற்பனை செய்து வருகிறோம். இந்தியாவில் முதன்முதலாக, 2008ல் 'கிளாஸ் டேபிள்' அறிமுகம் செய்தோம். 2009 முதல், 'ஓவல் பிரின்டிங்' மெஷின் வழங்கி வருகிறோம். போட்டி நாடுகளில் உள்ள தொழில்நுட்பத்தை நம் நாட்டுக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், சீனா, தைவான் மெஷின்களை, திருப்பூரில் சப்ளை செய்கிறோம். குறைந்த முதலீட்டில், அதிக உற்பத்தி என்பதே எங்களது குறிக்கோள்.
அதாவது, 500 'பீஸ்'களுக்கு பிரின்ட் செய்யும் நேரத்தில், 3,000 பீஸ்களுக்கு பிரின்ட் செய்யும் திறனுடன் மெஷின்களை வழங்கி வருகிறோம். ஆறு கலர் 'பைஹாங்' 'மினி ஓவல்' பிரின்டிங் மெஷின்கள், 21 லட்சம் ரூபாய் என்ற அறிமுக விலை சலுகையில் வழங்கி வருகிறோம்.
இவ்வகை இயந்திரங்களில், தினமும் 10 மணி நேரம் இயங்கினால், 'சிங்கிள்' ஆக இருந்தால், 6,000 பீஸ் பிரின்ட் செய்யலாம்; 'டபுள்' ஆக இருந்தால், 10 ஆயிரம் பீஸ் பிரின்ட் செய்ய முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆறு கலர் 'பைஹாங்' 'மினி ஓவல்' பிரின்டிங் மெஷின்கள், 21 லட்சம் ரூபாய் என்ற அறிமுக சலுகை விலையில் கிடைக்கின்றன. இவ்வகை இயந்திரங்கள், தினமும் 10 மணி நேரம் இயங்கினால், 'சிங்கிள்' ஆக இருந்தால், 6,000 பீஸ் பிரின்ட் செய்யலாம்; 'டபுள்' ஆக இருந்தால், 10 ஆயிரம் பீஸ் பிரின்ட் செய்ய முடியும்.