/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு
/
சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு
ADDED : ஜன 12, 2025 11:39 PM

பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக, பொங்கல் பண்டிகை கொண் டாட, திருப்பூரை சேர்ந்த தொழிலாளர் பலர் குடும்பத்தினருடன் தங்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர்.
கடந்த, 10ம் தேதி இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம் ஆரம்பித்தது நேற்று முன்தினம் முதல் பஸ், ரயில், டிராவல்ஸ் வாகனங்களில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு குடும்பம், குடும்பமாக கிளம்பி சென்று வருகின்றனர்.
மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் ஊர்களுக்கு செல்ல, மாவட்ட நிர்வாகம், போக்கு வரத்து துறை, போலீசார், மாநகராட்சி உள்ளிட்ட துறையினர் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தனர்.
திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், பொங்கல் பண்டிகையொட்டி பாதுகாப்பு பணியில், 300 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, ஊர்க்காவல் படையினர், டிராபிக் வார்டன் பணியில் உள்ளனர். மூன்று பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பிரதான ரோடுகளில் உள்ள முக்கிய சந்திப்புகளில் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் எவ்வித குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, புறநகரில் சப்-டிவிஷன் வாரியாக பொங்கல் பண்டிகையொட்டி மாவட்ட போலீசார் பணியில் உள்ளனர்.