/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ம.பி.,யில் முதலீட்டாளர் மாநாடு ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
/
ம.பி.,யில் முதலீட்டாளர் மாநாடு ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
ம.பி.,யில் முதலீட்டாளர் மாநாடு ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
ம.பி.,யில் முதலீட்டாளர் மாநாடு ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 08, 2025 11:30 PM

திருப்பூர் : உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வருமாறு, மத்திய பிரதேச அதிகாரிகள், திருப்பூர் ஏற்றுமதியாளருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில், அந்த மாநிலத்தின் தொழில் மேம்பாட்டு கழகம் சார்பில், 'உலக முதலீட்டாளர் மாநாடு -2025', வரும், 24, 25ம் தேதிகளில், மாநாடு நடக்கிறது. தமிழகத்தை சேர்ந்த முன்னணி நிறுவனங்களும், தொழில்துறையினரும் பங்கேற்க வருமாறு, அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மாநிலங்களுக்கு சென்று, மத்திய பிரதேச அரசின் தொழில் மேம்பாட்டு கழக அதிகாரிகள், நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர். திருப்பூர் வந்திருந்த மத்திய பிரதேச தொழில் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் சிருஷ்டி பிரஜாபதி தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் ஏற்றுமதியாளர்களை சந்தித்தனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பொதுசெயலாளர் திருக்குமரன், இணை செயலாளர்கள் குமார் துரைசாமி, சின்னசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று, இருமாநிலங்கள் இடையேயான வணிக சூழல் குறித்து ஆலோசித்தனர்.
மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்ய, திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் முன்வர வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஏற்றுமதியாளர்கள் தங்கள் வணிக முதலீடுகளை செய்து, தொழிலை விரிவுபடுத்தவும் தேவையான சலுகைகள் வழங்கப்படும். மத்திய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள, ஜபல்பூர் தொழில் பூங்காவை பார்வையிட திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வர வேண்டுமெனவும் அழைப்புவிடுத்துள்ளனர்.