/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கல்லுாரி அணிகளுக்கு அழைப்பு
/
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கல்லுாரி அணிகளுக்கு அழைப்பு
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கல்லுாரி அணிகளுக்கு அழைப்பு
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க கல்லுாரி அணிகளுக்கு அழைப்பு
ADDED : ஜன 09, 2024 12:39 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும், ஈஸ்ட்மேன் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, கல்லுாரி அணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்தி முடித்த, மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன், கல்லுாரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை அறிவித்துள்ளது. 'ஈஸ்ட்மேன் டிராபி'க்கான விண்ணப்பங்கள் நேற்று (8ம் தேதி) முதல் வினியோகிக்கப்படுகிறது. ஒரு அணிக்கு கட்டணம், 3,000 ரூபாய். பங்கேற்க விரும்பும் அணிகள், வரும், 31ம் தேதிக்குள் மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பிப்., முதல் வாரம் போட்டி அட்டவணை வெளியாகும்; இரண்டாவது வாரம் போட்டிகள் துவங்கும். பங்கேற்க ஆர்வமுள்ள கல்லுாரி கிரிக்கெட் அணிகள், 89400 38018 என்ற எண்ணில் அழைக்கலாம். திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் இத்தகவலை தெரிவித்துள்ளது.