தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாசன திட்டங்களை மேம்படுத்தியது :தி.மு.க.,  ஜெயராமகிருஷ்ணன் பெருமிதம் 

 பாசன திட்டங்களை மேம்படுத்தியது :தி.மு.க.,  ஜெயராமகிருஷ்ணன் பெருமிதம் 

 பாசன திட்டங்களை மேம்படுத்தியது :தி.மு.க.,  ஜெயராமகிருஷ்ணன் பெருமிதம் 


ADDED : ஏப் 13, 2026 10:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 10:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: ''அமராவதி அணை பாசனத்தை மேம்படுத்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது,'' என மடத்துக்குளம் தி.மு.க., வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் பேசினார்.

மடத்துக்குளம் தொகுதி தி.மு,க., வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன், தளி, திருமூர்த்திமலை, பள்ளபாளையம், மானுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார். கிராமங்களில், மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும், வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி ஜெயராமகிருஷ்ணன் பேசியதாவது: திராவிட மாடல் அரசு, 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற அடிப்படையில், மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் திட்டம், காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு உதவித்தொகையுடன் சத்தான உணவு வழங்கப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் உயர் தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது கலைஞர் அரசு; தற்போது, ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

திராவிட மாடல், 2.0 ஆட்சி அமைத்தால், இலவச மின்சாரம் பெறும், 20 லட்சம் விவசாயிகளுக்கு நவீன மின்சார பம்ப் செட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார்.

தி.மு.க., அரசு, அமராவதி பாசனத்தை மேம்படுத்தும் வகையில், அணை புனரமைக்கவும், பிரதான கால்வாய் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில், சிதிலமடைந்திருந்த கால்வாய் பகுதிகளை முழுமையாக புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு செயல்படுத்தி வரும் சமூக நலத்திட்டங்களால், மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைய தமிழக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். மாநில வளர்ச்சியோடு, மடத்துக்குளம் தொகுதியிலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, குடிநீர், வேளாண், தொழில் வளர்ச்சிக்கு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தவும், மக்களுடன் பயணித்து, மக்களுக்கான சேவையை தொடர உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us