/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரடுமுரடு பாதைதானா மக்களுக்கு 'விதி?'
/
கரடுமுரடு பாதைதானா மக்களுக்கு 'விதி?'
ADDED : டிச 05, 2025 07:57 AM

திருப்பூர்: கரடுமுரடான சாலையில் தினமும் லட்சம் வாகனங்கள் பயணித்துக்கொண்டிருந்தாலும், அதைப் பற்றி நெடுஞ்சாலைத்துறையினர் எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளனர்.
திருப்பூர் வளம் பாலம் சாலை - பார்க் ரோட்டை இணைக்க, சுரங்க பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, மத்திய பஸ் ஸ்டாண்ட், முனிசிபல் ஆபீஸ் வீதி வழியாக செல்லும் வாகனங்கள், குமரன் ரோட்டில் இருந்து, சாய்பாபா கோவில் வீதி, யுனிவர்சல் ரோடு, எவரெடி பெரிய விநாயகர் கோவில் வளைவு வந்து, வலதுபுறம் திரும்பி, வளர்மதி ஸ்டாப்பை அடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக மாற்றம் அமலில் உள்ள நிலையில், நகரின் முக்கியத்துவம் வாய்ந்த பிரதான சாலை என்பதால், இரவும், பகலும் சேர்த்து ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன. சாலையை கடக்க முடியாத நிலை அளவு, இதன் தரம் மிக மோசமாக உள்ளது.
குறிப்பாக, யுனிவர்சல் ரோடு வளைவு, விநாயகர் கோவில் முன் சாலை குண்டும், குழியுமாக, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை முழுதும் பரவி கிடக்கிறது. வளைவில் வந்து திரும்பும் டூவீலர் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். கனரக வாகன டயர்கள் சேதமாகின்றன. இதனால், நெடுஞ்சாலைத்துறை மீது பொதுமக்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.

