தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நீர்வழிப்பாதையா? குப்பைத்தொட்டியா?

நீர்வழிப்பாதையா? குப்பைத்தொட்டியா?

நீர்வழிப்பாதையா? குப்பைத்தொட்டியா?


UPDATED : நவ 15, 2026 04:56 PM

ADDED : நவ 15, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 04:56 PM ADDED : நவ 15, 2026 04:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கால்வாய் அவலம்

கரைப்புதுார் ஊராட்சி, பாரியூர் அம்மன் நகர், வாய்க்கால்மேடு ஸ்டாப் அருகே பி.ஏ.பி., கால்வாயில் குப்பை, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சுத்தம் செய்ய வேண்டும்.

– முத்துகுமாரசாமி, வாய்க்கால்மேடு. (படம் உண்டு)

குப்பை குவிப்பு

திருப்பூர், தாராபுரம் ரோடு, செரங்காடு – எம்.ஜி.பி., தியேட்டர் ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து குப்பை குவிக்கப்பட்டுள்ளது. அகற்ற வேண்டும்.

– ஈஸ்வரமூர்த்தி, செரங்காடு. (படம் உண்டு)

சுகாதாரக்கேடு

கணியாம்பூண்டி, ராம் நகரில் சாலையோரம் குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

– விஜயன் அண்ணாமலை, கணியாம்பூண்டி. (படம் உண்டு)

ஓடையில் குப்பை

திருப்பூர் மாநகராட்சி 1வது வார்டு, பிரியங்கா நகர் நீர்வழிப்பாதை ஓடையில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. தடுக்க நடவடிக்கை தேவை.

– பழனிசாமி, பிரியங்கா நகர். (படம் உண்டு)

சாலை எப்போது

சந்திராபுரம், பண்ணாரி மாரியம்மன் நகரில் பாதாள சாக்கடைக்காக சாலை தோண்டப்பட்டு ஐந்து மாதங்களாகியும் பணி முடிந்து சாலை சீரமைக்கப்படவில்லை. ஜல்லிக்கற்களுடன் சாலை கிடக்கிறது.

– ராமச்சந்திரன், சந்திராபுரம். (படம் உண்டு)

கேமரா பழுது

அவிநாசி – மேட்டுப்பாளையம் சாலை, கருவலுாரில் பொருத்தப்பட்டுள்ள ‘சிசிடிவி’ கேமராக்கள் பழுதாகி செயல்படாமல் உள்ளன. சீரமைக்க வேண்டும்.

– செந்தில்குமார், கருவலுார். (படம் உண்டு)

மின்விபத்து அபாயம்

பொங்குபாளையம் ஊராட்சி, கிருஷ்ணா நகரில் தண்ணீர் தொட்டிக்கு செல்லும் மின்கம்பிகள் தாழ்வாகவும், சாய்ந்த நிலையிலும் உள்ளன. விபத்து ஏற்படும் முன் சீரமைக்க வேண்டும்.

– நாகராஜ், கிருஷ்ணா நகர். (படம் உண்டு)

குப்பைக்கு தீ

பல்லடம், செட்டிபாளையம், சர்ச் வீதியில் குப்பையை அகற்றாமல் நகராட்சி ஊழியர்களே தீ வைத்து எரிப்பதால் புகைமூட்டம் ஏற்படுகிறது.

– பால்ராஜ், செட்டிபாளையம். (படம் உண்டு)

நாய்கள் தொல்லை

பெருந்தொழுவு – அலகுமலை ரோட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டும்.

– ரமேஷ், அலகுமலை. (படம் உண்டு)

ரியாக் ஷன்

தெருவிளக்கு எரிகிறது

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், டி.கே.டி., மில் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரியாமல் இருள் சூழ்ந்திருப்பது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து விளக்கு சீரமைக்கப்பட்டு தற்போது எரிகிறது.

– சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us