/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதினா சாகுபடி செய்ய ஆர்வமிருக்கா? விவசாயிகள் இதெல்லாம் பின்பற்றுங்க
/
புதினா சாகுபடி செய்ய ஆர்வமிருக்கா? விவசாயிகள் இதெல்லாம் பின்பற்றுங்க
புதினா சாகுபடி செய்ய ஆர்வமிருக்கா? விவசாயிகள் இதெல்லாம் பின்பற்றுங்க
புதினா சாகுபடி செய்ய ஆர்வமிருக்கா? விவசாயிகள் இதெல்லாம் பின்பற்றுங்க
ADDED : பிப் 17, 2025 10:57 PM
உடுமலை; நறுமண பயிர்கள் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள், அதிக செலவில்லாத புதினா சாகுபடியை தேர்வு செய்யலாம் என, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்று பாசனத்துக்கு கொத்தமல்லி தழை உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். சிலர் நறுமண பயிர்கள் சாகுபடியில் ஈடுபடவும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
அவ்வகையில், புதினா சாகுபடி மேற்கொள்ள தோட்டக்கலைத்துறையினர் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள்:
வடிகால் வசதியுடைய இருபொறை மண், காரத்தன்மையுடைய மற்றும் அங்கக சத்து நிறைந்த மண் வகைகள் அனைத்தும் சாகுபடிக்கு உகந்ததாகும். வேர் விட்ட தண்டுக்குச்சிகள் வாயிலாக, புதினா இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
நிலத்தை நன்கு உழுது ெஹக்டேருக்கு, 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு, பாத்திகள் அமைக்க வேண்டும். வேர் விட்ட தண்டு குச்சிகளை, 40 செ.மீ., இடைவெளியில், ஜூன், ஜூலை மாதங்களில் நடவு செய்யலாம்.
ஒரு ெஹக்டேருக்கு, 30;60;10 கிலோ என்ற விகிதத்தில், தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும். நடவு செய்த, 60 வது மற்றும் 120வது நாளில், ஒரு ெஹக்டேருக்கு, 30 கிலோ தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து இட வேண்டும்.
நல்ல முறையில் பராமரித்தால், நான்கு ஆண்டுகள் வரை, செடிகளில் இருந்து மகசூல் பெறலாம்.
இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.