/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போரடியவர்கள் மீது தடியடி கைது செய்வது சமூக நீதியா? மாநில பா.ஜ., தலைவர் கேள்வி
/
போரடியவர்கள் மீது தடியடி கைது செய்வது சமூக நீதியா? மாநில பா.ஜ., தலைவர் கேள்வி
போரடியவர்கள் மீது தடியடி கைது செய்வது சமூக நீதியா? மாநில பா.ஜ., தலைவர் கேள்வி
போரடியவர்கள் மீது தடியடி கைது செய்வது சமூக நீதியா? மாநில பா.ஜ., தலைவர் கேள்வி
ADDED : டிச 18, 2025 01:44 AM
கைது செய்வது தான் சமூக நீதியா?
- நமது நிருபர் -
'திருப்பூர் இடுவாய் ஊராட்சியில், கிராம நலனுக்காக போராடிய பெண்கள், முதியவர்கள் மீது தடியடி நடத்தி, அவர்களை குண்டு கட்டாக கைது செய்வது தான், தி.மு.க., அரசின் சமூக நீதியா' என, தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
திருப்பூர் மாவட்டம், இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன காளிபாளையத்தில் மக்களுக்கு இடையூறான வகையில், அரசு அமைக்கும் குப்பை கிடங்கிற்கு எதிராக போராடியவர்களின் மீது அடக்குமுறையை ஏவியுள்ள, தி.மு.க., அரசின் ஆணவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் நாள்தோறும் டன் கணக்கில் சேரும் குப்பை எடுக்கப்படாமல், மலை போல் காட்சி அளிக்கிறது. மொத்த குப்பையையும் சின்னக்காளிபாளையத்தில் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதை பற்றி கவலைப்படாமல், மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் லாரி, லாரியாக தி.மு.க., அரசு குப்பையை அந்த கிராமத்திற்கு அனுப்பி வைப்பது, எந்த வகையில் நியாயம்; ஆடு, மாடு மேயும் இடத்தில் வண்டி, வண்டியாக குப்பைகளை கொட்ட யாராவது ஒப்பு கொள்வரா?
முறையான பேச்சு நடத்தாமல், ஊரை விட்டு தள்ளி குப்பை கிடங்கு அமைக்க முடிமா என்ற வாய்ப்புகளை ஆராயாமல், கிராம நலனுக்காக போராடிய பெண்கள், முதியவர்கள் மீது தடியடி நடத்தி, அவர்களை குண்டு கட்டாக கைது செய்வது தான் தி.மு.க., அரசின் சமூக நீதியா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

