/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் நிலத்தில் குப்பை கொட்ட திட்டமா? எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் மனு
/
கோவில் நிலத்தில் குப்பை கொட்ட திட்டமா? எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் மனு
கோவில் நிலத்தில் குப்பை கொட்ட திட்டமா? எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் மனு
கோவில் நிலத்தில் குப்பை கொட்ட திட்டமா? எதிர்ப்பு தெரிவித்து மண்டல அலுவலகத்தில் மனு
ADDED : டிச 24, 2025 06:17 AM

திருப்பூர்: நல்லுாரில் கோவில் நிலத்தில் குப்பை கொட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த முயற்சியை கைவிட வேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்தனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 46 வது வார்டு பகுதியில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 16 ஏக்கர் நிலம் உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை கொண்டு வந்து கொட்டி, தரம்பிரிக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த தகவல் அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நேற்று மாலை, நல்லுார் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி உதவி கமிஷனரைச் சந்தித்து, பொதுமக்கள் இது குறித்து மனு அளித்தனர்.
மனுவில் கூறியுள்ளதாவது:
எங்கள் பகுதியில், காசிபாளையம், மணியகாரம்பாளையம், வி.எஸ்.ஏ.நகர், காஞ்சி நகர், ஜி.வி. நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. பல்வேறு பள்ளிகள் சுற்றுப்பகுதியில் உள்ளன. ஏறத்தாழ 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாள்தோறும் பல்லாயிரம் பேர் இப்பகுதியை கடந்து செல்கின்றனர். இங்கு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவது ஏற்புடையதாக இல்லை. முதியோர், குழந்தைகள் என பல தரப்பினர் உள்ள பகுதியில் இதுபோல் குப்பை கழிவுகளை கொட்டுவதன் மூலம் தொற்று நோய் பரவுதல் போன்ற ஆபத்துகள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், குப்பை கொட்டும் திட்டம் இருந்தால், அதனை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் பணி மேற்கொள்ளக்கூடாது கூடாது என்று மாநகராட்சி நிர்வாகத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அடுத்தகட்டமாக ஹிந்து அறநிலையத் துறை அலுவலர்களிடமும், மனு அளிக்க உள்ளோம்,' என்றனர்.

