/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டண மா?
/
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டண மா?
ADDED : பிப் 05, 2024 01:20 AM
திருப்பூர்;விஷேச, விடுமுறை நாட்களில் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, போக்கு வரத்து துறைக்கு அவ்வப்போது தொடர் புகார்கள் வருகின்றன.
பயணியர் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோவை மண்டல அளவில் அலுவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் 'வாட்ஸ்அப்' மூலம் புகார் மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதனால், ஆம்னி பஸ்களில் விதி மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், 93848 08304 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் கூறுகையில், “புகார்தாரர் தங்கள் பெயர், மொபைல்போன் எண், பயணம் செய்த தேதி, புறப்பட்ட மற்றும் பயணித்த இடம், டிக்கெட் போட்டோ, கட்டண விபரம், பஸ் எண் மற்றும் பஸ் நிறுவன பெயருடன் தெளிவாக புகார் அளிக்க வேண்டும். புகாரின் உண்மைத்தன்மை விசாரித்து, குழுவினர் உடனடி நடவடிக்கைக்கு பரிந்துரைப்பர்,” என்றனர்.

