ADDED : அக் 23, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையத்தில் உள்ள மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகம் அருகே கடந்த சில நாட்களாக குப்பை எடுக்கப்படாமல் மலை போல் தேங்கி கிடக்கிறது. தற்போது பெய்து வரும் மழையால், கொட்டப்பட்டுள்ள குப்பையில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விட்டது. மக்கள் ரோட்டை கடந்து செல்லவே சிரமமாக உள்ளது.
அரசு அலுவலகத்துக்கு அருகேயே இந்த நிலையென்றால், குடியிருப்பில் உள்ள மக்களின் நிலை என்னவாகும் என்று அதிர்ச்சியில் உள்ளனர். குப்பையை அகற்ற போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.