sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உடலும் உள்ளமும் நலம்தானா? மூச்சுப் பயிற்சி தரும் ஏற்றமிகு மாற்றங்கள்!

/

உடலும் உள்ளமும் நலம்தானா? மூச்சுப் பயிற்சி தரும் ஏற்றமிகு மாற்றங்கள்!

உடலும் உள்ளமும் நலம்தானா? மூச்சுப் பயிற்சி தரும் ஏற்றமிகு மாற்றங்கள்!

உடலும் உள்ளமும் நலம்தானா? மூச்சுப் பயிற்சி தரும் ஏற்றமிகு மாற்றங்கள்!


ADDED : நவ 10, 2024 04:16 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனித வாழ்வில் உடல் சொல்வதை மனம் ஏற்றுக் கொள்ளாது; அதே போல் மனம் சொல்வதையும் பல நேரங்களில் உடல் ஏற்றுக் கொள்ளாது. இந்த செயல்பாடு சில நேரங்களில் சில மனிதர்களுக்கு ஒத்துப் போவதாக இருக்கலாம். ஆனால், எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா மனிதர்களுக்கும் இது சரிப்படுமா என்பது மிகப் பெரிய கேள்வி.

மனதைக் கட்டுப்படுத்தினால் உடலும், உடலைக் கட்டுப்படுத்தினால் மனமும் எப்போதும் உற்சாகமாக, ஊக்கத்துடன் மனிதன் வாழலாம். ஆனால், இதனை எப்படி பின்பற்றுவது என்பது பலருக்கும் முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி. இந்த விஷயத்தை சிலர் அனுபவபூர்வமாக அறிந்திருப்பர். ஒரு சிலர் வேறு யாரேனும் பெற்ற அனுபவத்தைக் கொண்டு தெரிந்திருப்பர்.

இதனை சுயமாகவே உணர்ந்து, அறிந்து, கற்று, அனுபவித்து அதை செயல்வடிவத்துக்கு கொண்டு வருவதில் தான் மனிதனின் திறமை உள்ளது.

இதனை பலரும் பல வகையிலும் பல்வேறு பயிற்சிகள் வாயிலாகவும் அறிந்து கொள்ள வாய்ப்புகள் பல வகையில் உள்ளது. அவற்றில் தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல வகையான பயிற்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரு தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்தவுடன் ஒவ்வொரு உயிரும் செய்யக் கூடிய செயல் மூச்சு எடுப்பது ஆகும். அதே உயிரானது, இறுதியில் செய்யக் கூடிய செயல், எடுத்த மூச்சை வெளியே விடுவது. இந்த இரண்டு மூச்சுகளுக்கும் இடைப்பட்டது தான் மனித வாழ்க்கை.

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு லயம் உள்ளது. அவ்வாறே, நம் மூச்சுக்கும் ஒரு லயம் உள்ளது. அந்த லயத்தை விட்டு மாறும்போது தான் நமக்கு மனப்பிரச்னை, உடல் பிரச்சனை ஆகியன ஏற்படுகிறது. மனம் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அப்போது உடலும், அதன் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. அதேபோல், உடலில் எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போது மனம் பாதிக்கிறது.

எண்ணம் முக்கியம்


நமது உடலுக்கும் மனதுக்கும் எப்படி தொடர்பு உள்ளதோ அதுபோல நமது மூச்சுக்கும் நம் எண்ணங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. நமது எண்ணங்கள் மாறும்போது, உடனடியாக நமது மூச்சின் போக்கு மாறுவதை உணரலாம். எண்ணங்களால் நம் மனது பாதிக்காமல் இருக்க, நாம் மூச்சை சரியானபடி கையாண்டால் மனப் பிரச்சனை இல்லாமல் தப்பித்து கொள்ளலாம். இந்த ரகசியத்தை அழகாக கற்றுக்கொடுப்பது தான் வாழும் கலை எனப்படும் மூச்சுப் பயிற்சி.

இயந்திரமயமான இன்றைய சூழலில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆயிரமாயிரம் போராட்டங்கள். வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நேரம், காலம் பார்க்காமல் ஓடி ஓடி ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியுள்ளது.தேவைகள் அதிகமாகவும் வசதிகள் குறைவாகவும் உள்ளபோது மன அழுத்தம் ஏற்படுகிறது. இப்படி உண்டாகும் மன அழுத்தம் உடலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் தலைவலி, உடல் சோர்வு, எப்போதும் ஒரு மந்த நிலை, பசியின்மை, படபடப்பு, துாக்கமின்மை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழ எளிய மூச்சு பயிற்சிகளை பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் பல கோடி மக்கள் இப் பயிற்சியை பின்பற்றி வருகின்றனர்.

திருப்பூர் மங்கலம் ரோடு பட்டத்தரசியம்மன் கோவில் எதிரே உள்ள மையத்தில் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 17 வயதுக்கு மேற்பட்ட, ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம். வரும் 18 ம் தேதி, இது குறித்த அறிமுக வகுப்பு நடைபெறவுள்ளது.

இது குறித்து, வாழும் கலை பயிற்சியாளர் கண்ணதாசன் கூறுகையில், ''ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழங்கிய பிராணயாமம், பஸ்த்ரிகா, சுதர்சன கிரியா உள்ளிட்ட எளிய ஆசனங்கள் மற்றும் ஞானக் கருத்துகள் இப்பயிற்சியில் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு, 98431 71185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us