/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி பட்டறை; இஸ்ரோவின் கண்காட்சி பஸ் இன்று வருகை
/
மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி பட்டறை; இஸ்ரோவின் கண்காட்சி பஸ் இன்று வருகை
மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி பட்டறை; இஸ்ரோவின் கண்காட்சி பஸ் இன்று வருகை
மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி பட்டறை; இஸ்ரோவின் கண்காட்சி பஸ் இன்று வருகை
ADDED : மே 01, 2025 04:49 AM
உடுமலை : உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பயிற்சி பட்டறை இன்று துவங்குகிறது.
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் பயிற்சி பட்டறை இன்று (மே 1ம் தேதி) முதல் 5ம் தேதி வரை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.
பள்ளிகளில் படிக்கும் நான்காம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ள மாணவர்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியில் அறிவியல் வினாடி வினா, தொலைநோக்கி வாயிலாக பயிற்சிகள், அறிவியல் சாதனங்கள் செயல்முறை விளக்கம், ரோபோடிக்ஸ், ஆரியபட்டா மாதிரி வடிவம் அமைத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் நடக்கிறது.
மாலையில், தொலைநோக்கி வாயிலாக வான்நோக்கும் நிகழ்ச்சிகளும், பயிற்சி பட்டறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்போருக்கு, இஸ்ரோவின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பயிற்சி பட்டறையில் மாணவர்கள் செய்யும் மாதிரிகளை, அவர்கள் எடுத்துச்செல்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது. பயிற்சி நாள்தோறும் காலை, 10:00 மணி முதல், 4:00 மணி வரை நடக்கிறது.
விருப்பமுள்ள மாணவர்கள், 87782 01926 என்ற தொலைபேசி எண்ணில் அணுகி, விபரங்களை அறிந்துகொண்டு பயன்பெறலாம்.
மேலும், உடுமலையில் முதல் முறையாக இஸ்ரோவின் 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' எனப்படும் கண்காட்சி பஸ் இந்த முகாமில் வர உள்ளது.
இந்த பஸ்சில் இஸ்ரோவின் ராக்கெட் மாதிரிகள், சந்தரயான் மற்றும் மங்கல்யான் மாதிரிகள் உட்பட இஸ்ரோவின் பல படைப்புகள் குறித்து படைப்புகள் உள்ளன. இந்த பஸ் பயிற்சி பட்டறை முடியும் வரை ஆர்.ஜி., மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்படுகிறது. இஸ்ரோவின் படைப்புகளை, கண்காட்சி பஸ்சில் பார்வையிடலாம்.