நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலையில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
உடுமலை சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை சார்பில், வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர் நல சங்க தலைவர் ராமலிங்கம், நாயப் சுபேதார் நடராஜ் முன்னிலை வகித்தனர்.
சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு வரவேற்றார். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும், போட்டித்தேர்வு எழுதுவோருக்கும் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
தையல் பயிற்சி, ஆரி வேலைப்பாடு பயிற்சிகளுக்கான நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து அழகு கலை பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் நன்றி தெரிவித்தார்.