நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மனவளக்கலை மன்றம் சார்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் அமர்ஜோதி நகர் மனவளக்கலை மன்றம் சார்பில் பல்வேறு இடங்களில் தவ மையங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இம்மையங்களில் மனவளக்கலையில் பயிற்சி எடுத்தோருக்கு சான்றிதழ் வழங்கல் மற்றும் மையங்களுக்கு பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது.
அமர்ஜோதி நகர் மனவளக்கலை அறக்கட்டளை தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். திருப்பூர் மண்டல செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். சிவஜோதி மில்ஸ் வெள்ளியங்கிரி, பேமஸ் நிட் துரைகோபால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசினர்.

