/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தட்கல்' முறை மின் இணைப்பு வழங்கியதை தெளிவுபடுத்தணும்
/
'தட்கல்' முறை மின் இணைப்பு வழங்கியதை தெளிவுபடுத்தணும்
'தட்கல்' முறை மின் இணைப்பு வழங்கியதை தெளிவுபடுத்தணும்
'தட்கல்' முறை மின் இணைப்பு வழங்கியதை தெளிவுபடுத்தணும்
ADDED : மே 01, 2025 11:39 PM
உடுமலை; விவசாய மின் இணைப்புக்காக 'தட்கல்' முறையில் பணம் செலுத்தி, பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை.
இது குறித்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் அரசுக்கு அனுப்பியுள்ள மனு: உடுமலை, தாராபுரம் பகுதி விவசாயிகள் வட்டிக்கு கடன் பெற்று, மின் இணைப்புக்காக பணம் செலுத்தி 'தட்கல்' முறையில் விண்ணப்பித்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகளாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
சட்டசபை மானிய கோரிக்கையில், விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதா; அல்லது 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி பதிவு செய்து பெறும் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதா என, அரசு தெளிவுபடுத்தவேண்டும். வறட்சி துவங்கியுள்ள நிலையில், நிலைப்பயிர்களை காப்பாற்ற, மின் இணைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.