தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மண் பரிசோதனை செய்வது அவசியம்

 மண் பரிசோதனை செய்வது அவசியம்

 மண் பரிசோதனை செய்வது அவசியம்


ADDED : ஜன 30, 2026 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 08:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: மண் பரிசோதனை வாயிலாக மண் வளத்தை அறிந்து, உரம் மற்றும் நீர் நிர்வாகம் மேற்கொண்டால், அதிக மகசூல் பெற முடியும் என வேளாண்துறையினர் தெரிவிக்கின்றனர்.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், தொடர்ச்சியாக ஒரு வகை சாகுபடியை மேற்கொள்ளுதல் உட்பட காரணங்களால், மண் வளம் பாதித்து, விளைச்சல் குறைகிறது. இதற்கு மண் பரிசோதனை செய்ய வேளாண்துறை அறிவுறுத்துகிறது.

மண் பரிசோதனை செய்வதால், மண்ணிலுள்ள பேரூட்டங்களான தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவை கணக்கிட்டு சமச்சீர் முறையில் உரமிட முடியும். பயிருக்கு தீங்கு விளைவிக்கும் களர், உவர் அமிலத்தன்மை அகற்றலாம்.

பயிருக்கு உயிரோட்டமான நுண்ணூட்ட சத்துகளான இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டின், குளோரின் அளவை அறிந்து அதற்கேற்ப நுண்ணூட்ட உரமிடுதல் ஆகியவற்றிக்காக மண் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

வேளாண்துறையினர் கூறியதாவது: ஒரு பயிர் அறுவடை செய்த பின்பும், அடுத்த பயிருக்கு நிலத்தை தயார் செய்வதற்கு முன்பும் உள்ள இடைப்பட்ட காலத்தில் மாதிரி எடுக்க வேண்டும்.

ஒரு நிலத்தின் மண்வகை வெவ்வேறாக இருந்தால் மற்றும் மேட்டுப்பாங்கான மற்றும் பள்ளமான பகுதிக்கு தனித்தனியாக மண் மாதிரி எடுக்க வேண்டும். வரப்பு, வாய்க்கால், எரு குவித்த இடம் மற்றும் மர நிழலில் மண் மாதிரி எடுக்கக்கூடாது.

மண் மாதிரி எடுக்கும் முன் இலை, சருகு, புல் ஆகியவற்றை, மேல் மண்ணை செதுக்காமல், அப்புறப்படுத்த வேண்டும். பல்லடம் மண் ஆய்வகத்தில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு, வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us