/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கதேசத்தினர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்துவது அவசியம்
/
வங்கதேசத்தினர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்துவது அவசியம்
வங்கதேசத்தினர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்துவது அவசியம்
வங்கதேசத்தினர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்துவது அவசியம்
ADDED : மே 05, 2025 05:35 AM

திருப்பூர்; திருப்பூர் அருகே 24 ஆண்டாக முறைகேடாக தங்கியிருந்த வங்கதேச நபரை போலீசார் கைது செய்த சம்பவம், வங்கதேசத்தினர் மீதான கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
திருப்பூர் பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்களில், உ.பி., பீஹார், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட வெளிமாநிலத்தினர் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி, வங்கதேசத்தினர் பலரும் தொழிலாளர்களாக பணியில் சேர்கின்றனர்.
கோவை தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் தனிப்படை போலீசார் கண்காணிப்பைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி துவங்கி முதல் ஏப்ரல் மாதம் வரை என, நான்கு மாதங்களில் முறைகேடாக தங்கியிருந்த, 130 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சி தந்த கைது
திருப்பூர் அருகே கரைப்புதுாரில் வீட்டு கடன் தவணை செலுத்தாததால், சில நாட்களுக்கு முன் வீட்டை ஜப்தி செய்வதற்காக தனியார் நிறுவனத்தினர் வந்தனர். வீடு கட்டி, வாடகைக்கு விட்டவர், சயன் என்கிற ஷகீன், 40; இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது அப்போதுதான் தெரியவந்தது.
கடந்த, 1999ம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்தவர், சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, 2001ம் ஆண்டு திருப்பூருக்கு வந்தார். பத்து ஆண்டுகள் முன் கரைப்புதுாரில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வசித்து வந்தது தெரிந்தது.
கடந்த, நான்கு மாதங்களாக மாநகரம், புறநகரில் போலீசார் தீவிரமான சோதனை, கண்காணிப்பு எல்லாம் இருந்தும், இந்த நபர் போலீசில் சிக்கவில்லை.
கண்காணிப்பில் ஓட்டை
வங்கதேசத்தினர் பலர் கைது செய்யப்படுவது பெரும்பாலான நேரங்களில், குற்றச்சம்பவங்களிலோ, வேறு ஏதேனும் பிரச்னைகளிலோ அவர்கள் பிடிபடும்போதுதான். இன்னும் எத்தனை வங்கதேசத்தினர் இங்கு ஊடுருவியிருப்பரோ என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது, சயன் என்கிற ஷகீன் கைது சம்பவம். இதற்கென கூடுதல் போலீசாரை நியமித்து தேடுதல் வேட்டை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படும் நடைமுறை, கொரோனா காலத்தில் துவங்கியது. ஆனால், அப்படியே அது முடங்கிப்போனது.
போலீஸ் - வருவாய் - தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இது சாத்தியமாகும். இதை முறையாக மேற்கொண்டால், போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கியுள்ள வங்கதேசத்தினர் எளிதாகப் பிடிபடுவர்.