ADDED : பிப் 13, 2024 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம், பிப். 13--
பல்லடம் அடுத்த புள்ளியப்பம்பாளையம்- - சித்தம்பலம் ரோட்டில் உள்ள குட்டை ஒன்றில், நேற்று காலை முதலே கிராவல் மண் கடத்தல் பணி ஜரூராக நடந்து வந்தது.
அகழ் வாகனம் ஒன்று மண் அள்ளும் பணியில் ஈடுபட, டிப்பர் லாரிகள் அடுத்தடுத்து இடைவெளிவிட்டு வந்து மண் அள்ளி சென்றன.
குட்டையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. சமீபத்தில், குளம் குட்டைகளுக்குள் மண் அள்ளுவதற்தான அனுமதி எதுவும் மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை.
சித்தம்பலம் வி.ஏ.ஓ., செல்வக்குமாரை தொடர்பு கொண்ட போது அவர் மொபைல் போன் அழைப்பை ஏற்கவில்லை. ஆர்.ஐ., செந்தில்ராஜ் கூறுகையில், ''தற்போது, மண் அள்ளுவதற்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்கிறேன்,'' என்றார்.