/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அது ஒரு கனாக்காலம்... மீண்டும் வருமா வசந்தகாலம்
/
அது ஒரு கனாக்காலம்... மீண்டும் வருமா வசந்தகாலம்
ADDED : நவ 18, 2025 04:16 AM

அவிநாசி: அவிநாசி துவக்கப்பள் ளியில், 33 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள், மீண் டும் சந்தித்து, தங்கள் பள்ளி பருவ நிகழ்ச்சிகளை அசை போட்டு மகிழ்ந்தனர்.
அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், 1992 முதல் 1996 வரை 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், 33 ஆண்டுகள் கழிந்து சந்தித்து மகிழ்ந்தனர்.
அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் முதலிபாளையத்தில் உள்ள அரண் அறக்கட்டளை வளாகத்தில் சந்திப்பு கூட்டம் நடத்தினர். கல்விப் பருவத்தில் நடந்த மலரும் நினைவுகளை ஒருவர் ஒருவர் பேசி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.
விளையாட்டுப் போட்டிகள் வைத்து விளையாடியும், குழுவாக மொபைல் போனில் செல்பி எடுத்தும் நட்பை வெளிப்படுத்தினர். முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜய்காந்த், இந்திராணி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

