ADDED : நவ 24, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: வடகிழக்குப் பருவமழை எதிர்பார்க்கப்படும் சூழலில், திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் இன்று (நவ.,24) மாலை, மழை பெய்தது.இன்று மாலை 5:30 மணி முதல் காங்கயம், அவிநாசி, திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதில், திருப்பூர் நகரம் மற்றும் அவிநாசி பகுதிகளில் பலத்த மழை பெய்தது.வழக்கத்துக்கு மாறாக, இன்று காலை திருப்பூரில் அதிகபட்சம், 32 டிகிரி செல்சியஸ் (89 டிகிரி பாரன்ஹீட்) வரை வெயில் நிலவியதுடன், புழுக்கமும் அதிகமாக இருந்தது. இருப்பினும், மாலையில் மழை பெய்ததால் சூழல் மாறியது. வரும் நாட்களிலும் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
