/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசியில் ஐ.டி.சி., சென்டர் கோட்ட தபால்துறை ஏற்பாடு
/
அவிநாசியில் ஐ.டி.சி., சென்டர் கோட்ட தபால்துறை ஏற்பாடு
அவிநாசியில் ஐ.டி.சி., சென்டர் கோட்ட தபால்துறை ஏற்பாடு
அவிநாசியில் ஐ.டி.சி., சென்டர் கோட்ட தபால்துறை ஏற்பாடு
ADDED : ஜூலை 04, 2025 12:50 AM

திருப்பூர்; தபால் சேவைகளை ஒருங்கிணைத்து வேகப்படுத்த, தபால் அமைச்சகம், ஐ.டி.சி.. சென்டர் (Independent Delivery Center) @மையப்படுத்தப்பட்ட தபால் பட்டுவாடா சேவை மையம்' ஒவ்வொரு கோட்டத்திலும் திறக்கப்படுகிறது.
தபால் நிலையங்களில் உள்ள பீட்களை, ஆங்காங்கே ஒரே அலுவலகத்தில் இணைத்து, மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவை ஒருங்கிணைத்து, ஐ.டி.சி.. சென்டர் நாடு முழுதும் உருவாக்கப்பட்டு வருகிறது.
மேற்கு மண்டலத்தில் முதல் கட்டமாக ஒன்பது இடங்களில் ஐ.டி.சி., சென்டர் திறக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் கோட்டத்தில் அவிநாசி தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, அனுப்பர்பாளையத்தில் உள்ள தபால் பீட், அவிநாசியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவிநாசி தபால் அலுவலகத்தில் செயல்படும் ஐ.டி.சி., மையத்தில் இருந்து அனுப்பர்பாளையம் வட்டாரத்தை சேர்ந்த பத்து தபால் அலுவலர், கிராமிய அஞ்சல் ஊழியர் உள்ளிட்டோர், அவிநாசி வந்து சாதாரண தபால், பார்சல், விரைவு தபால்களை பெற்றுச் சென்று, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு வினியோகிக்க வேண்டும்.
நேற்று முன்தினம் இம்மையத்தை தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் திறந்து வைத்து, ஐ.டி.சி., மையத்தில் பணியாற்றுவது குறித்து ஊழியர்களுக்கு விளக்கினார். 'ஒரே இடத்தில் டெலிவரி மையம் உருவாவதால், பணிகள் எளிதாகும்,' என தபால் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரம், தபால் ஊழியர்கள், 'அனுப்பர்பாளையத்தில் இருந்து அவிநாசி சென்று அங்கிருந்து எடுத்து வந்து வினியோகிப்பதில் நேர விரயம் ஏற்படும்,' என்கின்றனர்.