தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஐ.டி.ஐ., பட்டமளிப்பு விழா 137 மாணவர்களுக்கு வழங்கல்

ஐ.டி.ஐ., பட்டமளிப்பு விழா 137 மாணவர்களுக்கு வழங்கல்

ஐ.டி.ஐ., பட்டமளிப்பு விழா 137 மாணவர்களுக்கு வழங்கல்


ADDED : நவ 23, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 06:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை அரசு ஐ.டி.ஐ.,யில், நடந்த பட்டமளிப்பு விழாவில்,137 மாணவர்கள் பயிற்சி முடித்து பட்டம் பெற்றனர்.

உடுமலை அரசு ஐ.டி.ஐ., யில், இன்று (நவ.,23) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் நிலையத்தின் முதல்வர் நதிச்சந்திரன் தலைமை வகித்தார்.பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் வரவேற்றார்.

அலுவலக மேலாளர் தெய்வநாயகம், பயிற்சி அலுவலர்கள் மாரிமுத்து, உமாச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, எம்.எல்.ஏ.,க்கள் ஜெயக்குமார் ஜெயராமகிருஷ்ணன் பங்கேற்று பேசினர்.

திருப்பூர் ‘டிக்’ உதவி இயக்குனர் மனோஜ், தனியார் நிறுவன நிலைய மேலாண்மை குழு தலைவர் மீனாட்சிசுந்தரம், பொது மேலாளர் ராஜசேகரன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. உதவி பயிற்சி அலுவலர் ராம்பிரகாஷ் நன்றி தெரிவித்தார். மொத்தம், 137 பயிற்சி முடித்த மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us