sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 களைகட்டியது பொங்கல் பண்டிகைக்கான 'ஷாப்பிங்' l கடைவீதிகளில் மக்கள் அலைமோதல்

/

 களைகட்டியது பொங்கல் பண்டிகைக்கான 'ஷாப்பிங்' l கடைவீதிகளில் மக்கள் அலைமோதல்

 களைகட்டியது பொங்கல் பண்டிகைக்கான 'ஷாப்பிங்' l கடைவீதிகளில் மக்கள் அலைமோதல்

 களைகட்டியது பொங்கல் பண்டிகைக்கான 'ஷாப்பிங்' l கடைவீதிகளில் மக்கள் அலைமோதல்


ADDED : ஜன 12, 2026 05:05 AM

Google News

ADDED : ஜன 12, 2026 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பொங்கல் பண்டிகைக்கான 'ஷாப்பிங்', திருப்பூரில் நேற்று களைகட்டியது. ஜவுளி, மொபைல் போன், பர்னிச்சர் பொருட்கள் வாங்க நேற்று கூட்டம் அலைமோதியது.

பொங்கல் திருநாளில், புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியன் மற்றும் தெய்வங்களுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம். வரும் 14ல் போகி; 15ல், தை பொங்கல்; 16ல், மாட்டுப்பொங்கல்; 17ல் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில், மதுரை, தேனி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட வெளி மாவட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் பலர், குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடுவதற்காக, சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

ஜவுளி கடைகள், மொபைல் போன் கடைகளில், பொங்கல் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டிருந்தது; ரேஷன் கடைகளில், அரசு அறிவித்த பரிசு தொகுப்பில் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது.

ரொக்கம் வாங்கிய கையோடு பலர் பர்சேஸில், இறங்கி வருகின்றனர். இதனால், திருப்பூர் பகுதி ஜவுளி கடைகளில் பண்டிகை கால 'ஷாப்பிங்' சூடுபிடித்துள்ளது.

காலையில் தொய்வுமாலையில் வேகம் நேற்றுமுன்தினம் இரவு முதல், நேற்று மதியம் 12:00 மணி வரை, திருப்பூரில் பரவலாக லேசான துாறல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. சாதாரண காலங்களிலேயே, வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, திருப்பூர் பகுதி கடைகளில், வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

நேற்று வார விடுமுறை நாள் மட்டுமின்றி பண்டிகை காலம் என்றாலும்கூட, காலை முதல் மதியம் வரை மழை பெய்துகொண்டிருந்ததால், மக்கள் பலரும் வீடுகளிலேயே முடங்கினர். மழை இல்லாததால், மாலை நேரம் பர்சேஸில் இறங்கினர்.

இதனால், குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு உள்பட பிரதான பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், பர்னிச் சர், மொபைல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை கடைகளில் மாலை முதல் இரவு வரை, வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வேட்டி, சேலைக்குமுன்னுரிமை குடும்பம் சகிதமாகவும், நண்பர்களுடன் சென்று, குழந்தைகள், சிறுவர், ஆண்கள், பெண்கள், தங்கள் மனதுக்கு பிடித்த விதவிதமான ஆடை ரகங்களை தேர்வு செய்து வாங்கிச்சென்றனர். குறிப்பாக, பெண்கள் சேலையையும், ஆண்கள் வேட்டியையும் தேர்வு செய்து வாங்குகின்றனர்.

புதிய ரக மொபைல்போன்கள், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்பட பொருட்கள், வீட்டுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்கள் வாங்க கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

திருப்பூரின் உள்ளூர் பின்னலாடை வர்த்தக மையமான காதர்பேட்டை சுற்றுப்பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த பின்னலாடை வர்த்தக கடைகள் செயல்பட்டுவருகின்றன.

காதர்பேட்டை கடைகளில், பொங்கலை முன்னிட்டு, குழந்தைகள், சிறுவர்கள் முதல் அனைத்து வயதினருக்கான பனியன், ஜட்டி ஆகிய உள்ளாடை ரகங்கள்; டிராக் பேன்ட், காலர், ரவுண்ட் நெக் டீ- சர்ட், சார்ட்ஸ் உள்பட அனைத்துவகை ஆடை ரகங்களும் குவிக்கப்பட்டுள்ளன.

நஞ்சப்பா பள்ளி வீதியில், ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை, அனைத்து கடைகளிலும், ஆடை ரகங்கள் வாங்க கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தங்கள் குடும்பத்தினருக்காக மட்டுமின்றி, சொந்த ஊரிலுள்ள உறவினர்களுக்கு வழங்குவதற்காகவும், ஒவ்வொருவரும் ஆடை ரகங்களை தேர்வு செய்து வாங்கினர்.

பண்டல்களில் இருந்து, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் ஆடை ரகங்களை எடுத்து காண்பிப்பது; ஆடைகளின் விலை விவரங்களை கூறி, விற்பனை செய்வது என, வர்த்தகர்கள் 'பிஸி'யாகினர்.

ஆடைகளை பார்வையிடுவது, விலை கேட்பது என, விசாரணையாக மட்டுமின்றி, பெரும்பாலானோர் ஆடை ரகங்களை வாங்கியதால், வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us