/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜல்லி கொட்டி ஆறு மாசமாச்சு! சாலை அமைப்பது என்னாச்சு?
/
ஜல்லி கொட்டி ஆறு மாசமாச்சு! சாலை அமைப்பது என்னாச்சு?
ஜல்லி கொட்டி ஆறு மாசமாச்சு! சாலை அமைப்பது என்னாச்சு?
ஜல்லி கொட்டி ஆறு மாசமாச்சு! சாலை அமைப்பது என்னாச்சு?
ADDED : ஜூன் 25, 2025 12:05 AM

திருப்பூர்; மங்கலம் பிரதான ரோடு இரண்டாவது வீதி ஏராளமான வீடுகள் அமைந்துள்ள குடியிருப்பு பகுதி. இந்த வீதியில் நீண்ட காலமாக தார் ரோடு இல்லாமல் அப்பகுதியினர் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால், பிரதான ரோட்டில் பெருமாள் மரக்கடையிலிருந்து பிரியும் இந்த வீதியில் தார் ரோடு போட ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக, அந்த ரோட்டை சமன்படுத்தி, ஜல்லிக் கற்கள் கொண்டு வந்து கொட்டப்பட்டது. ஆனால், தார் ரோடு போடும் பணி மேற்கொள்ளவில்லை. ஏறத்தாழ ஆறு மாதங்களாக இந்த ரோடு போடும் பணி கிடப்பில் போட்டுக் கிடக்கிறது.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாகச் செல்கிறது. ஜல்லி கொட்டியவர்கள் மீண்டும் பணியைத் தொடராமல் விட்டுச் சென்று விட்டனர். ஊராட்சியில் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. ரோடு வருமா வராதா என்றே தெரியவில்லை. ஜல்லி கொட்டாமல் இருந்திருந்தால் கூட பழைய மண் பாதையாவது பயன்பாட்டில் இருந்திருக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.