தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இயற்கை உரம் தயாரிப்பு கிராமங்களில் முடங்கியது!காட்சிப்பொருளாக மாறிய உரக்குடில்கள்

இயற்கை உரம் தயாரிப்பு கிராமங்களில் முடங்கியது!காட்சிப்பொருளாக மாறிய உரக்குடில்கள்

இயற்கை உரம் தயாரிப்பு கிராமங்களில் முடங்கியது!காட்சிப்பொருளாக மாறிய உரக்குடில்கள்


UPDATED : செப் 29, 2026 11:09 PM

ADDED : செப் 29, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 29, 2026 11:09 PM ADDED : செப் 29, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கழிவுகளை பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம், அனைத்து ஊராட்சிகளிலும் முடங்கியுள்ளது; திட்டத்துக்காக அமைக்கப்பட்ட உரக்குடில்களும் பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. கிராம குடியிருப்புகளில், குப்பை சேகரித்து, மட்கும், மட்காத கழிவுகளை தனியாக பிரிக்க, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், மட்கும் குப்பையை இயற்கை உரமாக மாற்றும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ரூ.90 ஆயிரம் மதிப்பீட்டில், 8 தொட்டிகளுடன் இயற்கை உரக்குடில்களும் அமைத்து உரம் தயாரிப்புக்கு தனியாக பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை உரம் ஊராட்சி நிர்வாகத்தினர் வாயிலாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மட்காத பிளாஸ்டிக் பொருட்களும் ஏலம் விடப்பட்டது. இந்த நடைமுறை சில மாதங்கள் மட்டும் இருந்தது.

தீ வைத்து எரிப்பு தற்போது ஊராட்சிகளில், மட்கும், மட்காத குப்பை பிரித்து கொட்டப்படுவதில்லை. உரக்குடில்கள் மற்றும் பொது இடங்களில் குப்பை முழுவதுமாக குவித்து வைத்து, குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை தீ வைத்து எரிக்கப்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் முற்றிலுமாக முடங்கி, கிராமங்களில் சுகாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. உடுமலை ஒன்றியம், தின்னப்பட்டி, தேவனுார்புதுார் ஊராட்சிகளில் டன் கணக்கில் குப்பை திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

பணியாளர் பற்றாக்குறை கிராமங்களில் குப்பைகளை பிரித்து சேகரிக்க, மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்கள் இல்லை. தற்போது, 150 வீடுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தள்ளுவண்டியுடன் நாள்தோறும், நுாற்றுக்கணக்ககான வீடுகளுக்கு சென்று, குப்பைகளை தரம் பிரித்து வாங்க முடிவதில்லை. சுழற்சி முறையில் இரு துாய்மை பணியாளர்கள் இரு நாட்களுக்கு ஒரு முறை குப்பையை சேகரிக்கின்றனர்.

இந்த நடைமுறை சிக்கல், திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பிரச்னையாக உள்ளது என ஊராட்சி நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாயமாகும் குடில்கள் இயற்கை உரம் தயாரிப்புக்காக அமைக்கப்பட்ட குடில்கள் மற்றும் தொட்டிகள், பராமரிப்பின்றி, இடிந்து, அந்த கட்டமைப்பே முழுவதும் காணாமல் போய் வருகிறது.

'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், இயற்கை உரம் தயாரிப்பை ஊக்குவிக்க பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது. ஆனால், எவ்வித பலனும் இல்லை.

இயற்கை உரக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. பிரச்னைக்கு தீர்வாக மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும்; மட்கும், மட்காத குப்பைகளை பிரித்து இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

ஆய்வு செய்து நடவடிக்கை

உடுமலை பி.டி.ஓ., சுப்பிரமணியம் கூறுகையில், ''திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை உரத்தை வாங்க விவசாயிகள் தயக்கம் காட்டியதால், திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மை பணியாளர்கள் நியமனம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்,'' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us