/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'துவக்கத்தில் கண்டறிந்தால் போதையில் மீள்வது எளிது'
/
'துவக்கத்தில் கண்டறிந்தால் போதையில் மீள்வது எளிது'
'துவக்கத்தில் கண்டறிந்தால் போதையில் மீள்வது எளிது'
'துவக்கத்தில் கண்டறிந்தால் போதையில் மீள்வது எளிது'
ADDED : ஆக 04, 2025 10:48 PM
திருப்பூர்; கலெக்டர் அலுவலகத்தில் மாநகர காவல்துறை சார்பில் போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்ற நல்லுார் உதவி கமிஷனர் தையல் நாயகி பேசியதாவது:
பெற்றோர், தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும். போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களிடம், தனிமைப்படுத்திக்கொள்வது, பெற்றோருடன் பேசுவதை குறைப்பது போன்ற நடவடிக்கை மாறுதல்கள் தெரியும்.
இதுபோன்று உங்கள் குழந்தைகளிடம் சந்தே கத்துக்கு இடமான மாறுதல்கள் தெரிந்தால், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், மிகச்சுலபமாக போதை பழக்கத்திலிருந்து விடுவித்துவிடலாம்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை நடப்பது தெரிய வந்தால், தயங்காமல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து நடந்த கையெழுத்து இயக்கத்தில், குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
தமிழ் 'மாயம்'
போதைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய போலீசார், பொதுமக்கள் கையெழுத்திடுவதற்காக மெகா பேனர் வைத்திருந்தனர். இதில், போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டிருந்தன. இதனால், பொதுமக்கள் பலருக்கும், பேனரில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. போலீசார் சொன்னதால் சிலர் கையெழுத்திட்டுச்சென்றனர். இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், அனைத்துதரப்பு மக்களுக்கும் புரியும் வகையில் தமிழில் பேனர்கள் வைக்கப்பட வேண்டியது அவசியம்.