/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெ., 8ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் மலரஞ்சலி
/
ஜெ., 8ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் மலரஞ்சலி
ஜெ., 8ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் மலரஞ்சலி
ஜெ., 8ம் ஆண்டு நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் மலரஞ்சலி
ADDED : டிச 06, 2024 05:19 AM
திருப்பூர், : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எட்டாவது ஆண்டு நினைவு நாள், திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகம் முன்பு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெ., உருவ படத்துக்கு அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் லோகநாதன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பெருமாநல்லுார் நால் ரோடு சந்திப்பில், ஜெ., படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. எம்.எல்.ஏ., விஜயகுமார் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள், மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அவிநாசி
அவிநாசி நகர அ.தி.மு.க., சார்பில், அவிநாசி புதிய பஸ் நிலையம் முன்பு, ஜெ., படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவிநாசி நகர பொறுப்பாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். நகர ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
அவிநாசி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் வேலாயுதம்பாளையம், கருமாபாளையம் ஊராட்சிகளில் ஜெ., படத்துக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செய்யப்பட்டது. அவைத் தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் தம்பி ராஜேந்திரன், தொழிற்சங்க செயலாளர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவிநாசி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கருவலுார் ஊராட்சியில் ஜெயலலிதா படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.