/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெ., பிறந்த நாள்; அ.தி.மு.க., கொண்டாட்டம்
/
ஜெ., பிறந்த நாள்; அ.தி.மு.க., கொண்டாட்டம்
ADDED : பிப் 25, 2024 12:08 AM

திருப்பூர்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை, அ.தி.மு.க., வினர் கொண்டாடினர்.
திருப்பூர் மாநகராட்சியின் 34வது வார்டு அ.தி.மு.க., மற்றும் அம்மா டிரஸ்ட் சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், முகாமை துவக்கி வைத்தார்.
ஜெ., பேரவை இணை செயலாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மொத்தம், 136 பேர் பங்கேற்ற முகாமில், 20 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேவையென கண்டறியப்பட்டது.
மேலும், 67 நபர்கள், கண் கண்ணாடி அணிய வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முகாமில் பங்கேற்றவருக்கு, நுரையீரல், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சரிபார்க்கப்பட்டது.
அன்னதானம்
திருப்பூர் மாநகராட்சியின், கே.வி.ஆர்., நகர், மைதானம், பாளையக்காடு, அய்யன்நகர், செல்லம்நகர், பழக்குடோன், வெங்கடாசலபுரம் பகுதிகளில், ஜெ., பிறந்த நாள் விழா, அ.தி.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது.
ஜெ., படத்துக்கு மலர் துாவி, பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். பொதுமக்கள், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் நடந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அவிநாசி
அவிநாசி தெற்கு ஒன்றியம் சார்பில், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன் தலைமையில், மங்கலம் ரோடு, ஸ்ரீ பாலமுருகன் கோவில் முன், ஜெ., படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.
n பெரிய கருணை பாளையத்தில் ஒன்றிய பொருளாளர் காவேரி ரமேஷ் தலைமையில், ஜெ., படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
n அவிநாசி பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் தலைமையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, ராயம்பாளையத்தில் கொடியேற்றப்பட்டது.
பொங்கலுார்
பொங்கலுார், கண்டியன்கோவிலில் முன்னாள் ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணி தலைமையில், ஜெ., படத்துக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. கண்டியன்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கிட்டுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.