/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி அருகேயுள்ள ஊராட்சிகளுக்கு ஜாக்பாட்
/
மாநகராட்சி அருகேயுள்ள ஊராட்சிகளுக்கு ஜாக்பாட்
ADDED : பிப் 13, 2024 12:36 AM
பொங்கலுார்;மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. இதை பார்த்து ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏக்க பெருமூச்சு விடுவர். தற்போது திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சிகளுக்கு மாநில அரசு வளர்ச்சி பணிகளை செய்ய சிறப்பு நிதி ஒதுக்க முன்வந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள பொங்கலுார் ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிபாளையம், பெருந்தொழுவு, தொங்குட்டி பாளையம், உகாயனுார் ஆகிய ஊராட்சிகள் இத்திட்டத்தில் பயனடைய உள்ளன. இனி இந்த ஊராட்சி பகுதிகளில் ரோடு, பாலம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கலுார் பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) ஷெல்டன் பெர்னாண்டஸ் கூறுகையில், ''மாநகராட்சியை ஒட்டி உள்ள இந்த நான்கு ஊராட்சிகளுக்கு தலா 60 முதல் ஒரு கோடி ரூபாய் வரை வளர்ச்சிப் பணி செய்ய திட்ட அறிக்கை அனுப்பியுள்ளோம். இதன் மூலம் இந்த ஊராட்சிகள் பயனடையும். மாநகராட்சியுடன் இணைப்பதற்கான எந்த ஒரு அரசாணையும் வரவில்லை'' என்றார்.