sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஜமாபந்தி நாளை துவக்கம்

/

ஜமாபந்தி நாளை துவக்கம்

ஜமாபந்தி நாளை துவக்கம்

ஜமாபந்தி நாளை துவக்கம்


ADDED : மே 18, 2025 11:18 PM

Google News

ADDED : மே 18, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; வருவாய்த்துறையில், கிராம கணக்குகளை தணிக்கை செய்வதற்காக, ஆண்டுதோறும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஒன்பது தாலுகா அலுவலகங்களிலும், 1434 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி, நாளை துவங்கி, 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தாராபுரம் தாலுகாவில், தாராபுரம் பிர்காவுக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களுக்கு நாளையும்; அலங்கியம் பிர்காவுக்கு உட்பட்ட ஒன்பது கிராமங்களுக்கு 22 ம் தேதி; மூலனுார் பிர்காவிலுள்ள ஒன்பது கிராமங்களுக்கு 23ம் தேதி; கன்னிவாடி பிர்காவிலுள்ள 12 கிராமங்களுக்கு 27ம் தேதி; குண்டடம் பிர்காவுக்கு உட்பட்ட 15 கிராமங்களுக்கு 28ம் தேதி; பொன்னாபுரம் பிர்காவுக்கு உட்பட்ட 8 கிராமங்களுக்கு 29 ம் தேதி; சங்கராண்டாம்பாளையம் பிர்காவில் ஒன்பது கிராமங்களுக்கு 30ம் தேதியும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

திருப்பூர் தெற்கு தாலுகாவில், நாளை, திருப்பூர் தெற்கு பிர்காவுக்கு உட்பட்ட மங்கலம், ஆண்டி பாளையம், திருப்பூர், வீரபாண்டி, இடுவாய் கிராமங்களுக்கும்; 22ம் தேதி, நல்லுார் பிர்காவுக்கு உட்பட்ட நல்லுார், முதலி பாளையம், முத்தணம்பாளையம் கிராமங்கள்; 23ம் தேதி, தெற்கு அவிநாசிபாளையம் பிர்கா, நாச்சிபாளையம், பெருந்தொழுவு, உகா யனுார், வடக்கு அவிநாசிபாளையம், தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், அலகுமலை, தெற்கு அவிநாசி பாளையம் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறும்.

அவிநாசியில், நாளை, சேவூர் பிர்காவுக்கு உட்பட்ட 14 கிராமங்கள்; 22ம் தேதி, அவிநாசி மேற்கு பிர்காவிலுள்ள ஒன்பது கிராமங்கள்; 23ம் தேதி, அவிநாசி கிழக்கு பிர்காவில் 10 கிராமங்கள்; 27ம் தேதி, பெருமாநல்லுார் பிர்காவில் 8 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறும்.

திருப்பூர் வடக்கு தாலுகாவில், நாளை, திருப்பூர் வடக்கு பிர்காவுக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல், மண்ணரை, தொட்டிபாளையம் கிராமங்களுக்கும், வரும் 22ம் தேதி வேலம் பாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், செட்டிபாளையம் கிராமங்களுக்கு நடத்தப்படும்.

ஊத்துக்குளி தாலுகாவில், குன்னத்துார் பிர்காவுக்கு நாளையும்; ஊத்துக்குளி பிர்காவுக்கு 22ம் தேதியும் ஜமாபந்தி நடத்தப்படும். பல்லடம் தாலுகாவில், பல்லடம் பிர்காவுக்கு நாளை; கரடிவாவி பிர்காவுக்கு 22ம் தேதி; சாமளாபுரம் பிர்காவுக்கு 23ம் தேதி; பொங்கலுாருக்கு 27ம் தேதி ஜமாபந்தி நடத்தப்படும்.

காங்கயம் தாலுகாவில், 20, 22, 23, 27; மடத்துக்குளத்தில், 20, 22; உடுமலையில், 20, 22, 23, 27, 28 தேதிகளில் ஜமாபந்தி நடைபெறும்.

மக்களே தயாரா?

பொதுமக்கள் தங்கள் கிராமத்துக்கான நாளில் ஜமாபந்தியில் பங்கேற்று, நில வகை மாற்றம், நில ஆவணங்களில் திருத்தம், பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்கள் அளித்து, தீர்வு பெறலாம்.

இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது Citizen portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். அவ்விண்ணப்பங்கள் ஜமாபந்தியில் பரிசீலிக்கப்பட்டு, பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும்.






      Dinamalar
      Follow us